Vimarsagan Media

Home » Malaysia » கேபிள் திருட்டு காரணமாக இன்று காலை கொமுட்டர் வழித்தடத்தில் தாமதங்கள் என கேடிஎம்பி அறிவிம்பு

கேபிள் திருட்டு காரணமாக இன்று காலை கொமுட்டர் வழித்தடத்தில் தாமதங்கள் என கேடிஎம்பி அறிவிம்பு

இன்று காலை கோமுட்டர் (Komuter) சேவையின் பாடாங் ஜாவா – ஷா ஆலாம் – பத்து தீகா வழித்தடத்தில், சிக்னல் கேபிள் திருடப்பட்டதன் காரணமாக ரயில்கள் 30 நிமிடங்களுக்கும் மேலாக தாமதமாக இயங்கியதை கே.டி.எம்.பி (KTMB) உறுதிப்படுத்தியது.

காலை 6.20 மணிக்கு சிக்னல் கோளாறு கண்டறியப்பட்டதாகவும், பழுதுபார்ப்பு பணிகள் நடைபெறும் வேளையில் ரயில்கள் தாமதமாக இயங்கக்கூடும் என்று பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் கூறியது.

கே.டி.எம்.பி-யின் துணைப் படையினர் (Auxiliary Police) மேற்கொண்ட கூடுதல் ஆய்வில், சுமார் 60 மீட்டர் நீளமுள்ள, நான்கு கோர்களைக் கொண்ட 16 மி.மீ சிக்னல் கேபிள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

தற்போது பழுதுபார்ப்பு மற்றும் கேபிள்களை மீண்டும் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரயில்வே உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், ரயில் சேவைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யவும், தங்கள் துணைப் படையினர் ரோந்துப் பணிகளையும் பாதுகாப்பு கண்காணிப்பையும் தீவிரப்படுத்துவார்கள் என்று கே.டி.எம்.பி தெரிவித்துள்ளது.

ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்களைக் கவனிப்பவர்கள், கே.டி.எம்.பி துணைப் படையின் தகவல் மையத்தை 03 2263 1194 (24 மணிநேரமும்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அல்லது உடனடி நடவடிக்கைக்காக காவல்துறையிடம் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்க ளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

Scroll to Top