Vimarsagan Media

Home » Malaysia » தனது கணவர் சையட் சாதிக் சையட்டுகாக ”பெர்சாமா அகு செத்தியா செலாமாஞா’ என்ற பாடல் பரிசு:பெல்லா

தனது கணவர் சையட் சாதிக் சையட்டுகாக ”பெர்சாமா அகு செத்தியா செலாமாஞா’ என்ற பாடல் பரிசு:பெல்லா

பாடகி மற்றும் நடிகையான பெல்லா அஸ்டில்லா, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) நடைபெற்ற தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தனது கணவரும் முவார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானுக்கு, ‘பெர்சாமா அகு செத்தியா செலலாமண்யா’ (Bersama Aku Setia Selamanya) என்ற புதிய பாடலைப் பரிசாக வழங்கினார்.

இயற்பெயர் தயாங் ஆரா நபெல்லா அவாங் அஸ்டில்லா கொண்ட 32 வயதான பெல்லா, இந்தப் பாடல் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதன்முதலாகப் பாடப்பட்டதாகத் தெரிவித்தார். பாடகர் மற்றும் இசையமைப்பாளர் ஹேல் ஹுசைனியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்தப் பாடலின் வரிகளை, தம்பதியினரின் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு இருவரும் இணைந்து எழுதினர்.

மிகக் குறுகிய காலத்திற்குள் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டதாகவும், பதிவு செய்யும் பணிகள் உட்பட அனைத்து நிலைகளிலும் ஹேல் பெரும் உதவியாக இருந்தார் என்றும் அவர் கூறினார்.

“இந்தப் பாடலைப் பாடுவது இதுவே முதல் முறை என்பதால், நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். எல்லாமே மிக விரைவாகத் திட்டமிடப்பட்டன. பாடலின் வரிகளை உருவாக்க எனக்குப் பெரிதும் உதவிய ஹேலுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.”

“நாங்கள் மூன்று முறை ஸ்டுடியோவிற்குச் சென்று பாடலைப் பதிவு செய்தோம்; அந்த மூன்று முறையும் அவர் உடனிருந்து எனக்கு உதவினார்,” என்று கோலாலம்பூரில் உள்ள மலேசிய சர்வதேச வர்த்தகம் மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC) நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்

Scroll to Top