மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), பல நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 30 மில்லியன் ரிங்கிட் லஞ்சமாகக் கோரியதாகவும், அதைப் பெற்றுக்கொண்டதாகவும் சந்தேகிக்கப்படும் அரசு ஊழியர் ஒருவரைக் கைது செய்துள்ளது.
MACC வட்டாரத் தகவல்களின்படி, சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் 2025-ஆம் ஆண்டுக்கும் நடப்பு ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த லஞ்சத் தொகையைப் பெற்றுள்ளார். பல்வேறு நிறுவனங்களுக்கு, 140 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வரிச் சுமையைக் குறைப்பதற்கு உதவியதற்காக, கைமாறாக இந்தத் தொகையைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
சுமார் 50 வயது மதிக்கத்தக்க, அரசுப் பிரிவு ஒன்றின் இயக்குநராகப் பணியாற்றும் அந்த நபர், நேற்று அதிகாலை 12.30 மணிக்கு கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார்.




