கோலாலம்பூரின் கெப்போங் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றின் கண்காணிப்பு கோபுரத்தில், 61 வயது நபர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
செந்தூல் காவல் துறைத் தலைவர் அனுவார் பக்ரி அப்துல் சலாம் கூறுகையில், தடயவியல் பிரிவினரின் ஆரம்பகட்ட ஆய்வில், அங்கு எந்தவிதப் போராட்டமோ அல்லது குற்றச் செயல்களுக்கான அறிகுறிகளோ தென்படவில்லை என்று தெரிவித்தார்.
கோலாலம்பூர் மருத்துவமனையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட உடற்கூராய் வில், கழுத்து அழுத்தப்பட்டதே மரணத்திற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் பகுப்பாய்வு செய்வதற்காக, வேதியியல் துறையிடம் ஒப்படைக்க இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளதாக அனுவார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு ‘திடீர் மரணம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மன அழுத்தம், மன உளைச்சல் அல்லது ஏதேனும் உணர்வுப்பூர்வமான சிக்கல்களை எதிர்கொள்பவர்கள், மருத்துவர்களின் உதவியை நாடலாம் அல்லது ‘பிஃப்ரெண்டர்ஸ்’ (Befrienders) அமைப்பை 03-7627 2929 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.




