கோலாலம்பூர்: பல நிதி நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சி கணிப்புகளை உயர்த்தியதை அடுத்து, தென்கிழக்கு ஆசியாவில் இரண்டாவது வேகமாக வளரும் பொருளாதாரமாக மலேசியா உருவெடுக்கும் நிலையில் உள்ளது.
எச் எஸ் பி சி (HSBC) குளோபல் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச் நிறுவனம், மலேசியாவிற்கான 2025 வளர்ச்சி கணிப்பை 4.2 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்தி, மிகவும் நம்பிக்கையுடன் திரும்பியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் இந்த வாரம் செய்தி வெளியிட்டுள்ளன.




