அன்றாடம் எல்லார் வீட்டிலேயும் இந்த குக்கர் இல்லை என்றால் வேலையே ஆகாது. அதுவும் அவசரமா ஆபீசுக்கு கிளம்பும்போது நமக்கு கை கொடுப்பது இந்த குக்கர் தான். ஏனென்றால் இந்த குக்கரில் சமைக்கும் போது விரைவிலேயே வெந்துவிடும். எரிவாயு குறையும் மற்றும் நேரமும் குறைவாகத் தான் எடுத்துக் கொள்ளும்.
சரி குக்கரில் நமக்கு நன்மை கிடைக்கிறது ஓகே, ஆனால் அந்த குக்கரை பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா? அந்த குக்கரின் மூலமாக ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்தது உண்டா (Pressure cooker life lesson)?
குக்கரை பொறுத்தவரையில் தலைப்பகுதியில் அதிகமான அழுத்தம். அடிப்பகுதியில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.
இத்தனை அழுத்தங்களுக்கும் அனலுக்கும் இடையில் குக்கர் இருந்தபோதிலும், அது அழகாக சிரித்துக்கொண்டே சத்தமாக விசில் அடிக்கிறது. அப்படி அந்த குக்கர் விசில் அடிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? அழுத்தத்தின் காரணமாக குக்கர் வெடித்து விடும். எத்தனை ஒரு அழகான விளக்கம் இந்த குக்கரில் இருக்கிறது.
எத்தனை பெரிய இன்னல்கள் இருந்த போதிலும் தலைக்கு மேலே பிரச்னைகள் இருந்த போதிலும் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல் எல்லோரிடமும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும்,




