Vimarsagan Media

Home » Malaysia » ஏழு பகுதிகளில் வெப்ப வானிலை

ஏழு பகுதிகளில் வெப்ப வானிலை

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) இன்று தீபகற்ப மலேசியாவின் ஏழு பகுதிகளில் முதல் நிலை (எச்சரிக்கை) வெப்ப வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

மெட்மலேசியாவின் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெர்லிஸ் இருப்பதாகவும், மற்ற ஆறு பகுதிகள் கெடாவில், அதாவது குபாங் பாசு, படாங் டெராப், போகோக் சேனா, சிக், பாலிங் மற்றும் மாவட்டங்களில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தது மூன்று நாட்களுக்கு தொடர்ந்து இந்தப் பகுதியில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Scroll to Top