ரஹீம் தம்பி சிக் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பெர்சத்து துணைத் தலைவர் ரட்ஸி ஜிடின் உடனடியாக மலாக்கா பெர்சத்துவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெர்சத்துவின் கொள்கைகள் மற்றும் போராட்டத்திற்கு உறுதியளித்த புதிய தலைவர்களை வலுப்படுத்தவும் வளர்க்கவும் அனுபவமும் தலைமைத்து வப் பண்புகளும் ரட்ஸியிடம் இருப்பதாக பெர்சத்து பொதுச் செயலாளர் அஸ்மின் அலி கூறினார்.
மலாக்காவில் பெர்சத்து பிரிவுகளின் தலைமையை மறுசீரமைக்கும் பணி அவருக்கு வழங்கப்படும்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
1982 முதல் 1994 வரை மலாக்கா முதலமைச்சராகப் பணியாற்றிய ரஹீம், பெர்சத்து உச்ச கவுன்சிலின் உறுப்பினர் பதவியையும் துறப்பதாக நேற்று தெரிவித்தார். இருப்பினும், அவர் பெர்சத்து உறுப்பினராகவே இருக்கிறார்.




