Vimarsagan Media

Home » World » இரவில் தெருவில் உறங்குவோர் நிலைப் பற்றி சிந்திக்கும் சிங்கை!

இரவில் தெருவில் உறங்குவோர் நிலைப் பற்றி சிந்திக்கும் சிங்கை!

இரவுநேரம் தெருவில் படுத்துத் தூங்குவோர் எண்ணிக்கை சுமார் 500 என்று சிங்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது கடந்த ஆண்டின் (2025) கணக்கு என்றும் அறிவிக்கப் பட்டது.

பல்வேறு காரணங்களைச் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கண்டறிந்திருப்பதாக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிப்லி கூறினார்.

வீட்டுக்குள் உறவில் சிக்கல், பாதுகாப்பான இருப்பிடத்தைத் தேடுவதில் பிரச்சினை, நிதிப் பற்றாக்குறை, சிறையிலிருந்து விடுதலையானது என்று பல சிக்கல்கள் இருக்கலாம் என்றார் அவர்.

தேவையைக் கண்டறிந்து உதவி தரப்படுவதாக மசகோஸ் சொன்னார். மக்கள் இரவில் தெருவில் படுத்து தூங்கும் நிலைக்குத் தள்ளப்படுவதைத் தடுக்க நடப்பில் இருக்கும் திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்துபூர்வமாகத் மசகோஸ் பதிலளித்தார்.

Scroll to Top