நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்காக பாஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை என்று பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மத் சாஹிட் ஹமிடி மறுத்துள்ளார்.
இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் ஒரு “புரிதல்” அளவிலேயே இருந்தன என்றும், அது இறுதி ஒப்பந்தம் அல்ல என்றும் சாஹிட் கூறினார்” பாஸ் கட்சியுடன் எங்களுக்கு எந்த ஒப்பந்தமும் இல்லாததால், கூறப்பட்ட அனைத்தையும் துல்லியமானதாகக் கருதக்கூடாது,” என்று இன்று இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சக நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
அரசியல் சூழலுக்கு ஏற்ப PAS கட்சியின் நிலைப்பாடு மாறக்கூடும் என்பதால், அக்கட்சியின் தலைவர்களின் அறிக்கைகளை அளவுக்கு அதிகமாக நம்ப வேண்டாம் என்றும் BN-க்கு சாஹிட் எச்சரிக்கை விடுத்தார்.”நாம் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும், ஆனால் அளவுக்கு அதிகமான நம்பிக்கையுடன் இருக்கக்கூடாது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் நிலைப் பாட்டை மாற்றிக்கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.
பாரிசான் தான் ஏற்கனவே வென்ற 14 இடங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும், பாஸ் தான் முன்பு வென்ற மூன்று இடங்களில் போட்டியிடவும் இரு கட்சிகளும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டதாக அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியதாகத் தகவல் வெளியான நிலையில் சாஹிட் இவ்வாறு பேசினார்.
ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் தேர்தலில், பாகாத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் ஆகிய கூட்டணிகள் அனைத்து 36 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கடந்த மாநிலத் தேர்தலில், பக்காத்தான் 17 இடங்களையும், BN 14 இடங்களையும், PN 5 இடங்களையும் வென்றன.
நெகிரி செம்பிலானுக்கான BN-இன் விரிவான உத்தி குறித்துப் பேசிய சாஹிட், இரு மாநிலங்களின் அரசியல் சூழல்கள் வெவ்வேறாக இருப்பதால், ஜோகூர் மாநிலத்தில் கடைப்பிடித்த அணுகுமுறையையே இங்கும் பின்பற்றப்போவதாகக் கூறினார்.




