நடிகர் அஜித்குமாருக்கு மஹிந்திரா நிறுவனம் தனது புது மாடல் ‘மஹிந்திரா பிஇ 6 பார்முலா எடிசன்’ காரைப் பரிசாக வழங்கியுள்ளது.
இந்தியாவின் மின்சார வாகனச் சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் கார்களான XUV 3XO EV, BE 6, XEV 9e, XEV 9s ஆகிய மாடல்கள் மூலம் தனது இருப்பை வலுப்படுத்தியுள்ளது.
இந்த மின்சார SUV-க்கள் மேம்பட்ட தொழில்நுட்பம், இணைய இணைப்பு வசதி, உயர் திறன் கொண்ட பேட்டரிகளுடன் ஆகியவற்றுடன் சிறந்த ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகின்றன.
இதனைத் தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனம் பார்முலா இ உலக சாம்பியன்ஷிப் பிரீமியர் ஒற்றை இருக்கை எலக்ட்ரிக் ரேஸிங் தொடரில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
கார் பந்தயங்களின் மீதான மஹிந்திராவின் ஆர்வம் காரணமாக, எலக்ட்ரிக் பந்தயங்களின் உச்சமாகக் கருதப்படும் ‘ஃபார்முலா இ’ (Formula E) சாம்பியன்ஷிப் போட்டியில் அந்நிறுவனம் பங்கேற்று வருகின்றது.
மஹிந்திரா நிறுவனம் ஃபார்முலா இ உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதைத் தொடர்ந்து புதிதாக BE 6 சிறப்பு எடிசன் ஃபார்முலா இ SUV மின்சாரத் திறன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்குமார் அதிவேகத் திறன்கொண்ட பல வகையான கார்களை சொந்தமாக வைத்துள்ள நிலையில் இந்த புதிய மின்சார காரை மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் ஆர்.வேலுசாமி நடிகர் அஜித்குமாருக்கு பரிசாக வழங்கியுள்ளது.உலகின் முதல் பார்முலா தீம் கொண்ட மின்சார SUV கார் இதுவாகும்.




