Vimarsagan Media

Home » Malaysia » முன்பணம் செலுத்தாத வெளிநாட்டு நோயாளிகள்: அமைச்சு விசாரணை

முன்பணம் செலுத்தாத வெளிநாட்டு நோயாளிகள்: அமைச்சு விசாரணை

சில வெளிநாட்டினர் இங்குள்ள மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு முன்பணம் செலுத்த வேண்டிய நிர்வாக விதியை மீறுவதாக வெளிவந்துள்ள குற்றச்சாட்டை அரசாங்கம் விசாரிக்கப்போவதாக சுகாதார அமைச்சர் சுல்கிப்பிலி அமாட் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

கோலாலம்பூர் மருத்துவமனை யில் பணியாற்றிய தாதி ஒருவர் கடப்பிதழ்கள் இல்லை என்று பொய் சொல்லி சில வெளிநாட்டினர் மருத்துவமனையை ஏமாற்றி முன்பணம் செலுத்துவதைத் தவிர்ப்பதாக சமூக ஊடகத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து சர்ச்சை உருவானது.

சர்ச்சைக்கு பதிலளித்த அமைச்சர் சமூக ஊடகப் பதிவுகளின் உண்மைத் தன்மை இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்றாலும் குற்றச்சாட்டு கவனமாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று விளக்கினார்.

“அதேசமயத்தில் விவரங்களை வெளியிட்டோரின் அடையாளத்தைக் காப்பாற்றும் கடமையும் அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் பொறுப்பும் அரசாங்கத்துக்கு உண்டு,” என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

மலேசிய சுகாதார அமைச்சின் விதிகளின்படி, அனைத்து வெளிநாட்டு நோயாளிகளும் பொது மருத்துவமனை களில் சிகிச்சை பெறுவதற்கு முன்னதாக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பண மாகச் செலுத்திய பின்னரே அங்குள்ள படுக்கைகளில் அனுமதிக்கப்படுவர்.

மூன்றாம் நிலை வார்டுகளில் (third-class wards) மருத்துவ சிகிச்சைகளுக்கு ( RM1,400 ரிங்கிட்), அறுவை சிகிச்சை களுக்கு (RM2,800 ரிங்கிட்) என முன்பணம் இருவகையாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

Scroll to Top