Vimarsagan Media

Home » Malaysia » 36 மாதங்கள் மேல் காலாவதியான உரிமம் பெற்றவருக்கு புடி95 கிடையாது

36 மாதங்கள் மேல் காலாவதியான உரிமம் பெற்றவருக்கு புடி95 கிடையாது

புத்ராஜயா: 36 மாதங்களுக்கு மேல் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிய மலேசியர்கள், இலக்கு வைக்கப்பட்ட புடி மடானி RON95 (Budi95) மானியத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள் என்று டத்தோ ஏடி ஃபட்லி ராம்லி தெரிவித்துள்ளார்.

சாலைப் போக்குவரத்துத் துறையின் (JPJ) தலைமை இயக்குநர், Budi95 மானியத்திற்கான தகுதி, உரிமத்தின் நிலையைப் பொறுத்தது என்று விளக்கினார். மேலும், அனைத்து உரிமதாரர்களும் தங்கள் உரிமங்களைச் செல்லுபடியாக வைத்திருக்கவும், தகுதியைத் தக்க வைத்துக் கொள்ளவும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்றும் நினைவூட்டினார்.

“செயலில் உள்ள உரிமம் என்பது, கடைசியாகப் புதுப்பித்த தேதியிலிருந்து 36 மாதங்களுக்கு மேல் காலாவதியாகாத உரிமம் என வரையறுக்கப்படுகிறது. இந்தக் காலத்திற்குள், உரிமதாரர்கள் Budi95 மானியத்திற்குத் தகுதியுடை யவர்களாக இருப்பார்கள்,” என்று அவர் கூறினார்.

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான உரிமங்களை வைத்திருப்பவர்கள் அவற்றைத் தானாகவே புதுப்பிக்க முடியாது என்றும், அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்திலும் ஓட்டுநர் திறன் தேர்வை மீண்டும் எழுத வேண்டும் என்றும் ஏடி ஃபட்லி மேலும் கூறினார்.

மோட்டார் வாகனம் ஓட்டும் எவரும் தங்கள் ஓட்டுநர் உரிமம் செல்லுபடியாக இருப்பதையும், காலாவதியாகவில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் ஏடி ஃபட்லி வலியுறுத்தினார்.

Scroll to Top