Vimarsagan Media

Home » Entertainment » அவன் இவன் பிரபலம் நடிகை ஜனனி நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்

அவன் இவன் பிரபலம் நடிகை ஜனனி நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்

அவன் இவன்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஜனனி ஐயர், சாய் ரோஷன் ஷ்யாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.சாய் ரோஷன் ஷ்யாம் (விமானி ) நேற்று மார்ச் 30, 2026 அன்று எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். இந்த தகவலை ஜனனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஜனனி, ‘அவன் இவன்’, ‘தெகிடி’, மற்றும் பிக்பாஸ் தமிழ் சீசன் 2 மூலம் அறியப்பட்டவர். ஜனனி தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்து, ‘Now and Forever!’ என்று பதிவிட்டுள்ளார். இந்த ஜோடி காதலித்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top