அமெரிக்காவை தலமாக கொண்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ஒரக்கள் (oracle) ஒரே அடியாக 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது. அந்நிறுவனின் வருவாய் அதிகரித்து வந்தபோதும் உலகம் முழுவதிலும் உள்ள தங்கள் அலுவலகங்ளில் இருந்து மொத்தமாக 30,000 பேரை பணிநீக்கம் செய்த அந்நிறுவனத்தின் முடிவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பணிநீக்கத்தில் அதிக பாதிப்பு இந்தியாவில் தான். அதாவது, 30,000 பேரில் 12,000 பேர் அந்நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரக்கள் உடைய அலுவலங்கள் இந்தியாவில் பிரதானமாக பெங்களூரு, ஐதராபாத்திலும், டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தாவில் பிற ஆராக்கிள் அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த பணிநீக்கம் இந்திய ஊழியர்களை அதிகம் பாதிப்பதாக கூறப்படுகிறது.
ஒரக்கிள் உடைய இந்த பாரிய பணிநீக்கத்துக்கு செயற்கை நுண்ணறிவு தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. உலகின் முன்னணி ஏஐ சேவை நிறுவனமான ஓபன்ஏஐ உடன் ஆரக்கிள் நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் ஏஐ தரவு மையங்கள் அமைக்க 156 பில்லியன் டாலர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தரவு மையங்களில் பொறுத்த பிரத்தேயேக சிப்-களை வாங்குவதற்காக ஒரக்கள் நிறுவனத்துக்கு 50 பில்லியன் டாலர் தேவைப்படும் என்று தெரிகிறது.
இந்த செலவுகளை சமாளிக்க ஒரக்கிள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து சிக்கனத்தில் ஈடுபட்டுள்ளது என்று கருதப்படுகிறது.அதேநேரம் அந்நிறுவனதுக்கு வருவாய் அதிகரித்தபோதும் ஏற்கனவே 108 பில்லியன் டாலர் கடன் உள்ளது. இதனால் அந்நிறுவனம் கடும் அழுத்தத்தில் இருப்பதால் செலவு விஷயத்தில் ஒரக்கிள் கவனமாக செயல்பட்டு வருகிறது.



