Vimarsagan Media

Home » World » ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – 8 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – 8 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி என்.சி.ஆர். பகுதியிலும் நில அதிர்வுகளை உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, தராவான் அருகே 71.01 டிகிரி கிழக்கு மற்றும் 36.52 டிகிரி வடக்கு அட்சரேகையில் அமைந்திருந்தது.

பஞ்சாபில் உள்ள நொய்டா, சண்டிகர், லூதியானா, ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ஸ்ரீநகர், உதம்பூர் மற்றும் டேராடூன் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மற்றும் பல இடங்களில் இருந்து நில அதிர்வு உணரப்பட்டன.

இந்த நில அதிர்வின் மையப்புள்ளி, ஆப்கானிஸ்தானின் பதக்ஷான் மாகாணத்தில்,பாகிஸ்தான்-தஜிகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள இந்துகுஷ் பகுதியில் அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கம் 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் இந்துகுஷ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் காபூலில் வீடு இடிந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்த தாகவும், ஒரு குழந்தை காயமடைந்த தாகவும் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Scroll to Top