Vimarsagan Media

Home » Malaysia » முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக் காலமானார்

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக் காலமானார்

துன் டாக்டர் லிங் லியோங் சிக் இன்று சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 82. அவர் வேந்தராகப் பணியாற்றிய துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் களுக்கு அனுப்பப்பட்ட ஒரு செய்தியில் அவரது மறைவு உறுதி செய்யப்பட்டது.

பேராக், கோலா காங்சாரில் பிறந்த, முன்னாள் MCA தலைவரான இவர், 1986 முதல் 2003 வரை போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றினார். இதற்கு முன்னர், அவர் துணைத் தகவல் அமைச்சர், துணை நிதி அமைச்சர் மற்றும் துணை கல்வி அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்தார்.

\

லிங், சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார். அவர் 1974-ல் மாத்தா கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அடுத்த இரண்டு பொதுத் தேர்தல் களிலும் (1978 மற்றும் 1982) அத்தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார். பின்னர் 1986-ல் லாபிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, அத்தொகுதியை நான்கு முறை தன்வசம் வைத்திருந்தார்.

Scroll to Top