தவறாக ஏறிய ரெயிலில் இருந்து இறங்கிவிட்டேன் .என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார். தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, 2007-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது அவரது சினிமாப் பயணம் சரிவை சந்தித்திருந்தாலும், அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
கடந்த 2022-ம் ஆண்டு இவர், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான சில காலத்திலேயே அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே கடந்த மார்ச் மாதம் இருவரும் சட்டப்படி விவாகரத்துப் பெற்றுக்கொண்டனர்




