இலங்கையில் நட்டத்தில் இருக்கும் ஒரு விமான நிலையத்திற்கு முதலீட்டாளர்கள் தேவை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் தெற்குப் பகுதியில் சீனாவிடமிருந்து கடன் வாங்கி மத்தள ராஜபக்சா (Mattala Rajapaksa) அனைத்துலக விமான நிலையம் கட்டப்பட்டதுஅது 2013ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
ஆனால் அங்கு அன்றாட விமானப் பயணங்கள் ஏதும் கிடையாது.மின்சாரக் கட்டணம் செலுத்தக்கூட போதுமான வருவாயை அது ஈட்டவில்லை. அரசாங்கப் பணத்தில்தான் விமான நிலையம் நடக்கிறது. பணம் கரைகிறது.
அந்தப் பகுதியில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பல இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. அது வனவிலங்குக் காப்பகத்திற்கு அருகே அமைந்திருக்கிறது. ஈராண்டுக்கு முன்பு இந்திய நிறுவனத்தி ற்கும் ரஷ்ய நிறுவனத்திற்கும் 30 ஆண்டு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. அதுவும் சரிவரவில்லை. எனவே இப்போது முதலீடு செய்ய ஆள் தேடுகிறது இலங்கை அரசாங்கம்.- இலங்கை எதிர்நோக்கும் நிதி நெருக்கடிக்குச் சீனாவிடம் கடன் வாங்கியது முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.




