Vimarsagan Media

Home » Malaysia » ஆர்வலர் தமிம் தஹ்ரி அப்துல் ரசாக் மீது ‘ரெட் நோட்டீஸ்’ பிறப்பிக்குமாறு காவல் துறை இன்டர்போலிடம் விண்ணப்பம்

ஆர்வலர் தமிம் தஹ்ரி அப்துல் ரசாக் மீது ‘ரெட் நோட்டீஸ்’ பிறப்பிக்குமாறு காவல் துறை இன்டர்போலிடம் விண்ணப்பம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறிய ஆர்வலர் தமிம் தஹ்ரி அப்துல் ரசாக் (Tamim Dahri Abdul Razak) மீது ‘ரெட் நோட்டீஸ்’ (Red Notice) பிறப்பிக்குமாறு காவல்துறை இன்டர்போலிடம் (Interpol) விண்ணப்பித்துள்ளது.

தமிமைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், குடிநுழைவுத் துறையின் தகவல்களின்படி அவர் இன்னும் வெளிநாட்டிலேயே இருப்பதாக நம்பப்படுவதாகவும் உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார்.

“மே 17 அன்று லங்காவி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திடமிருந்து அவரைக் கைது செய்வதற்கான பிடிவாரண்ட்டைக் காவல்துறை பெற்றது; மேலும் சந்தேக நபரைக் ‘கறுப்புப் பட்டியலில்’ (blacklisted) சேர்த்துள்ளது.

“அவரது கடப்பிதழை (passport) ரத்து செய்யுமாறு கோரியுள்ள காவல்துறை, ஜூன் 8 அன்று இன்டர்போலிடம் ‘ரெட் நோட்டீஸ்’ பிறப்பிக்கவும் விண்ணப் பித்துள்ளது,” என்று அவர் நாடாளு மன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டார்.

தமிமை நீதிமன்றத்தில் ஆஜராக வைப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஆர்.எஸ்.என். ராயர் (PH-ஜெலுத்தோங்) எழுப்பிய கேள்விக்கு சைஃபுதீன் இவ்வாறு பதிலளித்தார்.

இந்துக்களின் புனிதப் பொருளான ‘திரிசூலத்தை’ (trishul) அவமதிப்பதாகக் காட்டப்பட்ட காணொளி ஒன்றைத் தொடர்ந்து, தமிம் மீது மொத்தம் 192 காவல் புகார்கள் அளிக்கப்பட்டன

Scroll to Top