நடிகர் ஜலீல் ஹமீத், இன்று திங்கட்கிழமை (மே 4) நண்பகல் வாக்கில் தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 69. அவர் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது மரணம் நிகழ்ந்ததாக அவரது மகள் அஃபிகா ஜலீல் உறுதிப்படுத்தி னார்.
“ஆம், உண்மைதான், என் தந்தை காலமானார்,” என்று அவர் ‘தி ஸ்டார்’ பத்திரிகையின் மலாய் மொழி இணையதளமான ‘எம்ஸ்டார்’ இடம் கூறினார். “என் அம்மா அவரைப் பார்க்க அறைக்குள் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதைக் கண்டார்.”
அவரது நோய் குறித்துக் கேட்டபோது, தனது தந்தை இதய வீக்கத்தால் அவதிப்பட்டு வந்ததாக அஃபிகா பகிர்ந்துகொண்டார். அவரது உடல், சிலாங்கூர், ஷா ஆலமில் உள்ள மஸ்ஜித் அல் முனவ்வராவுக்குக் கொண்டுவரப்பட்டு, அசார் தொழுகை. க்குப் பிறகு USJ 21 முஸ்லிம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
“என் தந்தையின் நிலைமை சீராகவும், அவர் இறைநம்பிக்கையாளர்களுடன் சேரவும் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு எங்கள் குடும்பம் கேட்டுக்கொள்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.




