Vimarsagan Media

Home » Malaysia » பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 5-க்கு 5 ஹைக்கூ சவால்

பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 5-க்கு 5 ஹைக்கூ சவால்

• ஹைக்கூ பற்றிய தேடலுக்கான களம். வாருங்கள் ஹைக்கூ படைப்போம்.

• பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்க முகநூல் வழியாக 5.5.2026 முதல் 9.5.2026 வரை நடத்தப்படும்.

• ஒவ்வொரு நாளும் இரவு 11.59 மணியுடன் அன்றைய நாளுக்கான ஹைக்கூ பதிவு நிறைவுபெறும்.

• 5 நாள்களுக்கு 5 கருப்பொருள் வழங்கப்படும்.

• கருப்பொருளுக்கேற்ற ஹைக்கூவைப் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முகநூலில் பதிவிட வேண்டும்.

• 5 நாள்களுக்கு 5 ஹைக்கூ பதிவிட வேண்டும்.

• கருப்பொருள் ஒவ்வொரு நாளுக்கும் முன்பதாகவே முகநூலில் பதிவிடப்படும்.

• ஹைக்கூ இலக்கணத்திற்கு உட்பட்டு 3 வரிகளில் அமைய வேண்டும்.

• படைப்புகள் சுயமாக எழுதியதாக இருக்க வேண்டும்.

• 5 நாள் 5 ஹைக்கூ பதிவிட்டவர்களின் படைப்புகளில் இருந்து

5 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

• வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ், புத்தகப்பரிசு, ரொக்கம் RM 50 வழங்கப்படும்.

தொடர்புக்கு:

சிவாலெனின் (தலைவர்) 016-5684302

மகேந்திரன் நவமணி (பொறுப்பாளர்) 012-5984099

Scroll to Top