Vimarsagan Media

Home » Malaysia » புத்ராஜயா மற்றும் சைபர்ஜயாவில் பணிபுரியும் மலேசியர்கள் :-குறைந்த கட்டண மாதாந்திர ரயில் சேவை

புத்ராஜயா மற்றும் சைபர்ஜயாவில் பணிபுரியும் மலேசியர்கள் :-குறைந்த கட்டண மாதாந்திர ரயில் சேவை

பயணத்தை மேலும் மலிவானதாக மாற்றுவதற்காக, கோலாலம்பூர் அனைர்துலக விமான நிலையம் (KLIA), புத்ராஜயா மற்றும் சைபர்ஜயாவில் பணிபுரியும் மலேசியர்களுக்குக் குறைந்த கட்டணங்களை வழங்கும் புதிய மாதாந்திர ரயில் பயணச்சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எக்ஸ்பிரஸ் ரெயில் லிங்க் (ERL) வழங்கும் இந்தப் பயணச்சீட்டுகளான MyKLIA மாதாந்திர பயண அட்டை (MTC) மற்றும் MyPutrajaya MTC ஆகியவை, KLIA-வின் இரு முனையங்களில் ஏதேனும் ஒன்றில் பணிபுரியும் மலேசியர்களையும், புத்ராஜயா அல்லது சைபர்ஜயாவில் பணிபுரியும் அல்லது வசிக்கும் அரசு ஊழியர்களையும் பிரத்தியேகமாக இலக்காகக் கொண்டுள்ளன.

மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடிக்கு அரசாங்கம் அளிக்கும் பதிலிறுப்பின் ஒரு பகுதியாக இந்த மலிவான பயணச்சீட்டு கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

“நாங்கள் பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை ஊக்குவிக்க விரும்பு கிறோம், இது மறைமுகமாக எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கிறது.”

குறிப்பிட்ட பகுதிகளில் பணிபுரிபவர்கள் மோட்டார் வாகனங்கள் மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் இது உதவுகிறது,” என்று அவர் நேற்று இங்குள்ள KLIA-வின் டெர்மினல் 2-இல் உள்ள ERL நிலையத்தில் இந்த பாஸ் களை அறிமுகம் செய்தபோது கூறினார்.

சலுகையாளர்கள் என்ற முறையில், சுமார் 60% அளவில் மட்டுமே இருக்கும் பயணிகளின் எண்ணிக்கையை மேம்படுத்த, அவர்கள் தங்கள் பங்கைச் செய்ய நாங்கள் ஊக்குவிக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

MyKLIA MTC பாஸை வாங்குவதற்கான தகுதியை உறுதிசெய்ய, KLIA-வில் உள்ள அனைத்து முதலாளிகளும் தங்கள் ஊழியர்களை நேரடியாக ERL-இல் பதிவு செய்யுமாறு அவர் வலியுறுத்தினார்.

“அனைத்து நிறுவனங்களும் இதில் இணைந்தால், நிச்சயமாக ஒரு நல்ல வரவேற்பு இருக்கும்.

Scroll to Top