Vimarsagan Media

Home » India » தந்தையை இழந்த வேதனையில் உழன்ற நடிகர் ஜீவா ரமேஷ் ..கட்டி அணைத்து ஆறுதல் சொன்ன விஜய்!

தந்தையை இழந்த வேதனையில் உழன்ற நடிகர் ஜீவா ரமேஷ் ..கட்டி அணைத்து ஆறுதல் சொன்ன விஜய்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி சாலை விபத்தில் உயிரிழந்தநிலையில், திரைத்துறையினர் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த மூத்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி ராஜஸ்தானில் விபத்தில் பலியானது திரையுலகை துயரத்தில் ஆழ்த்தி யுள்ளது. அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு மயிலாப்பூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர்கள் தனுஷ், சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் ஜீவா, ரமேஷ் ஆகியோரின் தந்தை ஆர்.பி.சௌத்ரி (74) நேற்று மாலை ராஜஸ்தானில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி பலியானார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங் களை தயாரித்துள்ளனர்.

அவரது உடல் ராஜஸ்தானில் இருந்து நேற்று மாலை சென்னைக்கு எடுத்து வரப்பட்டு தற்போது இறுதி அஞ்சலிக்காக அவரது மயிலாப்பூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் தனுஷ், சூர்யா, தவெக தலைவர் விஜய் உட்பட பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

Scroll to Top