Vimarsagan Media

Home » India » பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் விபரீத முடிவு.. அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் விபரீத முடிவு.. அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை

தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 85.அவ்வழியே காரில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுனரை காரை நிறுத்த சொல்லி கீழிறங்கிய அவர் ஆற்றில் குதித்துள்ளார்.

தீயணைப்பு துறையினர் அவரின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மரணம் குறித்து விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பல படங்களை தயாரித்துள்ள இவர், இயக்குநராகவும் இருந்துள்ளார். அஜித்தின் துணிவு உள்ளிட்ட 18 படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த இவரின் வெளிப்படையான துறை சார்ந்து பேச்சும் விமர்சனங்களும் பெரிதும் கவனிக்கப்பட்டன. அவரின் திடீர் தற்கொலை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Scroll to Top