Vimarsagan Media

Home » General » கவிஞர் கோமு புதுக்கவிதைப் போட்டி

கவிஞர் கோமு புதுக்கவிதைப் போட்டி

1.இப்போட்டி மலேசியர்களுக்கு மட்டுமே.

2.கவிதைகள் இனம், மதம், அரசர் எனப்படும் 3Rக்கு எதிராகவோ தனி நபர், மதநல்லிணக்கம்,இனம், சமூக ஒற்றுமை, மொழி, பண்பாடு மற்றும் நாட்டுப்பற்றுக்கு எதிராகவோ இருக்கக் கூடாது.

3.ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்ப முடியும்.

4.கவிதை சொந்தப் படைப்பாக இருத்தல் வேண்டும். அச்சிலோ சமூக ஊடகத்திலோ பதிவிடப்பட்டதாக இருத்தல் கூடாது.

5.கவிஞர்கள் தங்களின் விருப்பம் சார்ந்து எந்தப் பாடுபொருளிலும் கவிதை படைக்கலாம்.

6.கவிதை 25 முதல் 32 வரிகளுக்குள் இருத்தல் வேண்டும்.

7.கவிதை யூனிகோட் பயன்பாட்டில் 12 எழுத்துருவில் தட்டச்சுச் செய்திருக்க வேண்டும்.

8.கவிதை WORDS, PDF ஆகிய இருவகையிலும் peraktamilwriters@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு 04.06.2026 இரவு மணி 11.59க்குள் அனுப்பிவிட வேண்டும்.

9.கவிதையை மின்னஞ்சல் செய்யும் போது எழுத்தாளர்கள் தனித்தாளில் பெயரைத் தமிழ் மற்றும் மலாய் மொழியில் அடையாள அட்டையில் இருப்பது போலவே எழுதி அனுப்பிட வேண்டும். புனைபெயரையும் அதில் இணைக்கலாம்.

10.அனுப்பிய கவிதை சுயமாக எழுதப்பட்டது என்றும் கவிதை தேர்வு செய்யப்பட்டால், அதனை நூலாக்கம் செய்யும் உரிமை பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது என்னும் உறுதி கடிதத்தையும் கவிதையோடு எழுத்தாளர்கள் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.

11.உறுதிக் கடிதத்தோடு மின்னஞ்சல் முகவரி, புகைப்படம், தொடர்பு எண் ஆகியவையும் அனுப்பி வைக்க வேண்டும்.

12.விதிமுறைக்கு உட்படாத கவிதைகள் கண்டிப்பாக நீக்கப்படும்.

13.கவிதை அனுப்பிய பின்னர் ஏற்பாட்டாளர்களை, எழுத்தாளர்கள் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல், வாயிலாகத் தொடர்பு கொள்ளக்கூடாது.

14.நீதிபதிகளின் முடிவே இறுதியானது.

15.போட்டி தொடர்பில் கூடுதல் தகவல் பெற 016-5684302 என்னும் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Scroll to Top