கிழக்கு காங்கோ பகுதியில் அரியவகை எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த பாதிப்பால் இதுவரை 131 பேர் பலியான நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி, காங்கோ சுகாதாரத் துறை அமைச்சர் சாமுவேல் ரோஜர் கம்பா கூறுகையில், “513 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். 131 பேர் தற்போது வரை பலியான நிலையில் அனைவரும் வைரஸ் தொற்று காரணமாக பலியாகியுள்ளனரா என்ற விசாரணை நடைபெற்று வருகின்றது” என்றார்.
தற்போதைய தொற்றுப் பரவல் மே 15 அன்று முதன்முதலாக கண்டறியப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளோ தடுப்பூசிகளோ இல்லாத இபோலா நோயின் அரியவகை பண்டிபுக்யோ வைரஸால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.




