புத்ராஜயாவில் உள்ள குடிநுழைவு தலைமையகம், ஜாலான் டூத்தாவில் உள்ள கோலாலம்பூர் கடப்பிதழ் அலுவலகம், வாங்சா மஜு நகர்ப்புற மாற்ற மையம் மற்றும் ஷா ஆலம் குடிநுழைவு அலுவலகம் ஆகியவை இதன் முதற்கட்டப் பணிகளில் ஈடுபடும் என்று அவர் கூறினார்.
ஜூலை மாதத்திற்குள் நாடு தழுவிய முழுமையான விநியோகம் எதிர்பார்க்கப்படுகிறது.
“முன்பு, நமது கடவுச்சீட்டுகளில் 49 பாதுகாப்பு அம்சங்கள் இருந்தன, ஆனால் புதிய பதிப்பில் பாதுகாப்பு அம்சங்கள் கிட்டத்தட்ட இருமடங்காகி யுள்ளன. இது நமது கடவுச்சீட்டுகளை மேலும் பாதுகாப்பானதாகவும், போலியாக உருவாக்குவதைக் கடினமாக்குவதாகவும் மாற்றுவதற் காகும்,” என்று புத்ராஜயாவில் அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட ஹாலோகிராம்கள், புற ஊதா அச்சிடுதல், மறைக்கப்பட்ட காட்சி அம்சங்கள் மற்றும் போலியைத் தடுப்பதற்கான பிற சிறப்பு அம்சங்கள் இந்த மேம்பாடுகளில் அடங்கும் என்று ஜகாரியா கூறினார்.
“அனைத்துலக பாஸ் போர்ட் புத்தகத்தைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் நூல் கூட அதன் சொந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது, மேலும் ஒவ்வொரு பக்கமும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
தங்கள் அனைத்துலக பாஸ் போர்ட் மாற்றுவதில் அவசரப்பட வேண்டாம் என்று ஜகாரியா பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். ஆறு மாதங்களுக்கு மேல் செல்லு படியாகும் தற்போதைய கடவுச்சீட்டுகள் பயணத்திற்கு செல்லுபடியாகும் என்றும், அவற்றை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், இணையவழியில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மாற்றியமைக்கப்பட்ட படங்களைப் பயன்படுத்தாமல், உண்மையான புகைப்படங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.
“அனைத்துலக பாஸ் போர்ட் விண்ணப்பதாரர்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங் களைப் பயன்படுத்தக் கூடாது என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.”
“விண்ணப்பதாரர்கள் தங்கள் புகைப்படங்களை மேம்படுத்த முயன்ற பல நிகழ்வுகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம் – உதாரணமாக, படங்களை பிரகாசமாக்குவது அல்லது அவற்றின் தோற்றத்தை மெருகூட்டுவது – மேலும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியுள்ளனர்,” என்று அவர் கூறினார். மேலும், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட படங்களைக் கண்டறியும் நிபுணத்துவம் குடிநுழைவு அதிகாரிகளிடம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.




