Vimarsagan Media

Home » India » கே.ராஜனின் விபரீத முடிவுக்குகாரணம் :- உண்மையை உடைத்த பிள்ளைகள்;-

கே.ராஜனின் விபரீத முடிவுக்குகாரணம் :- உண்மையை உடைத்த பிள்ளைகள்;-

சமீபத்தில், 85 வயதான தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் இருந்து கிழே குதித்து உயிரிழந்தார். தென்னிந்திய தயாரிப்பாளர்களுள் மிகவும் பிரபலமானவராகவும், ஹிட் படங்களை தயாரிப்பவராகவும் இருந்தவர் கே.ராஜன். இவர் அடையாறு ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொணடது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து சமீபத்தில் அவருடைய பிள்ளைகள் அவரைப்பற்றி பேசியிருக்குக்கிறார்கள்.இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது இல்லம் அமைந்துள்ள தண்டையார் பேட்டை தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வந்தடைந்தது.

அவரது பிள்ளைகள் பத்திரிக்கையாளரி டம் கூறியதாவது ” அப்பா சினிமால ஜெயிக்கணும்னு வந்தாரு. பெரிய லெவல்ல ஜெயிச்சாரு.

விநியோகஸ்தர் சங்கத்துல இப்ப தலைவரா இருக்குறாரு. அவரைப் பத்தி தப்பு தப்பா ஏதோ போட்டாங்க கையெடுத்துக் கும்பிடுறேன், அவர் யாருகிட்டயும் அவர் பணம் வாங்கல, கடன் வாங்கல.

தயவுசெஞ்சு இதப் புரிஞ்சுக்கோங்க, தப்பா போடாதீங்க. அவர் பணம்தான் 20 கோடி ரூபாய்க்கு தயாரிப்பாளர்கள் கிட்ட இருக்குது. அதற்குண்டான எவிடென்ஸ் எல்லாம் என்கிட்ட இருக்கு.

அதை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், இப்போதைய தலைவர் திரு. தமிழ்க்குமரன் அவர்கள்கிட்ட கொடுத்திருக்கோம். ஏற்கனவே அப்பாவும் கம்ப்ளைன்ட் கொடுத்திருக் காங்க.

விநியோகஸ்தர் சங்கத்திலேயும் கம்ப்ளைன்ட் இருக்கு, இதுலயும் இருக்கு யார் யார் கொடுக்க வேண்டியதுன்னு. அதனுடைய நடவடிக்கை எடுப்போம். அந்த மன உளைச்சலில் இப்படி பட்ட விபரித முடிவுக்கு அப்பா வந்திருக் காரு.என்றார் அவரது மகன்

Scroll to Top