Vimarsagan Media

Home » Malaysia » 8வது விமர்சகன் விருது விழா 2026’ நிகழ்விற்கான பதிவு தொடக்கம் !

8வது விமர்சகன் விருது விழா 2026’ நிகழ்விற்கான பதிவு தொடக்கம் !

குறும்படங்கள் மற்றும் இசைக் காணொளி துறையில் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் நடத்தப்படும் ‘8வது விமர்சகன் விருது விழா 2026’ நிகழ்விற்கான பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு உள்ளது.

விமர்சகன் மீடியா ஏற்பாடு செய்யும் இந்த விருது வழங்கும் விழா, வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரிலுள்ள விஸ்மா துன் சம்பந்தன் டான்ஸ்ரீ ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் நடைபெறவுள்ளது.

மாலை 3 மணி முதல் தொடங்கும் இந்த விழாவில், குறும்படங்கள் மற்றும் இசை காணொளிகளுக்கான பல்வேறு பிரிவு களில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

திரைப்படம் மற்றும் இசைத் துறையில் புதிய திறமைகளை ஊக்குவிக்கும் முக்கிய மேடையாக இந்த நிகழ்வு அமை யும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும், போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப் பட்டு உள்ளது.பதிவு இணைப்பு

https://forms.gle/oCYHzoWzoo7KCjLF6

நிகழ்ச்சி தொடர்பான மேலும் தகவல்களுக்கு +6011-36861982 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளலாம் என்றும் விமர்சகன் மீடியா சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Scroll to Top