உணவு மற்றும் குளிர்பான சங்கிலித் தொடர் நிறுவனத்தை நடத்தி வரும் ஒரு தொழிலதிபர் மீது, சுமார் 1.5 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட குற்றவியல் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டின் பேரில், இன்று இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஸ்டீம் எரா எஸ்.டி.என். பி.எச்.டி நிறுவனத் தின் இயக்குநர் யோங் பிட் லோக் (48), தனது சொந்தப் பயனுக்காக நிறுவனத் தின் நிதியிலிருந்து 1,468,958.29 ரிங்கிட் டை தனது தனிப்பட்ட வங்கிக் கணக் கிற்கு மாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளார்.
இந்தக் குற்றம், 2024 மார்ச் 11 முதல் அக்டோபர் 24 வரை பண்டார் பாரு ஸ்ரீ பெட்டாலிங்கில் நடந்ததாகக் கூறப்படு கிறது.
தண்டனைச் சட்டத்தின் 409-வது பிரிவின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை யோங் மறுத்துள்ளார். இப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் இரண்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.துணை அரசு வழக்கறிஞர் ஸுல் ஹில்மி லத்தீஃப், 120,000 ரிங்கிட் பிணைத்தொகை கோரினார்.
யோங், இன்னும் படித்துக்கொண்டி ருக்கும் 16 முதல் 21 வயதுக்குட்பட்ட மூன்று பிள்ளைகளை ஆதரிக்கிறார் என்றும், அவரது மனைவி ஒரு இல்லத்தரசி என்றும் லீ கூறினார். மேலும், உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்றுவரும் தனது 71 வயது மாமியாரையும் அவர் ஆதரிக்கிறார்.
குற்றம் சாட்டப்பட்டவர் மூன்று முறை தனது வாக்குமூலத்தை அளித்தார், ஆனால் அவர் ஒருபோதும் காவலில் வைக்கப்படவில்லை. அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று திங்களன்று அவருக்குத் தெரிவிக்கப்பட்ட பிறகு, நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படு வதற்கு முன்பு அவர் பிரிக்ஃபீல்ட்ஸ் காவல் தலைமையகத்திற்குத் தானாக முன்வந்து சென்றார்,” என்று அவர் கூறினார்.
நீதிபதி அஸ்ருல் டாரஸ், ஒரு ஜாமீனுடன் RM50,000 பிணைத்தொகைக்கு அனுமதி அளித்து, ஜூன் 29 அன்று விசாரணை க்கு நாள் குறித்தார்.




