அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரீன் கார்டு பெற விரும்பும் குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
“அசாதாரணமான சூழ்நிலைகளைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் தங்களுடைய குடிநுழைவு நிலையை மாற்ற நினைப்பவர்கள், நாட்டிற்கு வெளியே உள்ள தூதரக வழிமுறைகள் மூலமாகவே செய்ய வேண்டும்,” என்று (யூஎஸ்சிஐஎஸ்) தெரிவித்தது.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளில் ஓர் அங்கமாக உள்ள இந்த நகர்வு, விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அமெரிக்கா வுக்கு வருகை தருபவர்கள் நாட்டில் இருக்கும்போதே கிரீன் கார்டு பெறுவதற்காக விண்ணப்பிக்க இருந்த வழியை மூடுகிறது.
தற்போதைய நடைமுறை இந்த விண்ணப்பக் காலத்தில் குடும்பங்கள் ஒன்றாக இருக்க அனுமதித்தது என இந்தக் கொள்கையை விமர்சிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் இந்த புதிய கொள்கை அங்கு வசிக்கும் இந்தியர்களையும் பாதிக்குமென நிபுணர்கள் கூறுகின் றனர் கிரீன் கார்டுக்காக 10 லட்சம் இந்தியர்கள் காத்திருகிகின்றனர்.
கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்பவர்களில் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் விண்ணப்பங் களின் எண்ணிக்கை, இதர நாடுகளில் இருந்து வரும் தொழில்முறை பணி யாளர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகம்.




