Vimarsagan Media

Home » India » விஷம் வைத்து கொன்றுவிடுங்கள்..ஒரு மனுஷனை வாழ விடமாட்டீங்களா? நடிகர் பாலா கண்ணீர்!

விஷம் வைத்து கொன்றுவிடுங்கள்..ஒரு மனுஷனை வாழ விடமாட்டீங்களா? நடிகர் பாலா கண்ணீர்!

இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா தமிழில் அன்பு, ‘அப்பா அம்மா செல்லம்’ வீரம் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டு பாடகி அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அதைத்தொடர்ந்து 2024 ஆண்டுகளுக்கு கோகிலா மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். பாலாவின் முதல் மனைவி அவர் சில புகார்களை கூறி அதுகுறித்து வழக்குகள் நடந்து வரும் நிலையில் தற்போது பாலா இதற்கு மேல் என்னால் முடிவில்லை என்னை கொன்று விடுங்கள் என வேதனையுடன் பேசி உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், உணர்ச்சி கரமான மலையாளத்தில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக தனது வாழ்க்கையில் சந்தித்த வேதனைகள், மனஅழுத்தங்கள் மற்றும் வழக்குகளால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். நான் படித்த காலத்தில் இருந்த வாழ்க்கை வேறு. இப்போது நான் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறேன். திருமணம் ஆனதில் இருந்து பல விஷயங்களை வெளியில் சொல்ல முடியாமல் மனதில் வைத்துக்கொண்டு வாழ்ந்தேன்.

எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு தான் இருந்தேன். சில உண்மைகளை சொல்லவே முடியவில்லை. காரணம் நான்தான். சிலரைக் காப்பாற்று வதற்காகவே பல விஷயங்களை வெளியே பேசவில்லை

Scroll to Top