Vimarsagan Media

Home » World » பெல்ஜியத்தில் மாணவர்கள் சென்ற மினிபஸ் மீது ரெயில் மோதி 4 பேர் பலி

பெல்ஜியத்தில் மாணவர்கள் சென்ற மினிபஸ் மீது ரெயில் மோதி 4 பேர் பலி

பெல்ஜியத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பக்கென்ஹவுட் என்ற கிராமத்தில் இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் மீது ரெயில் மோதியது.

இந்த விபத்தில் 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.பள்ளி மாணவர்கள் சென்ற மினி பஸ் மீது ரெயில் மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவுசெய்துள்ள பெல்ஜிய உள்துறை மந்திரி பெர்னார்ட் குவின்டின், விபத்தில் சிக்கியவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டுவர வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்

Scroll to Top