Vimarsagan Media

Home » World » அமெரிக்காவால் தேடப்படும் இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் துபாயில் சிக்கினார்

அமெரிக்காவால் தேடப்படும் இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் மன்னன் துபாயில் சிக்கினார்

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் ஷிரான் பாசிக், துபாயில் கைது செய்யப்பட்டு உள்ளார். துபாய் பாதுகாப்புப் படையின ரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈரானிய போதைப்பொருள் வலையமைப்புடன் அவருக்கு உள்ள நேரடித் தொடர்புகள் காரணமாக, அவர் அமெரிக்காவால் கூட தேடப்படும் நபர் என்றும் கூறப்படுகிறது.

ஒரு செல்வந்த தொழிலதிபராக அவர் துபாயில் பதுங்கியிருந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டிற்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் 5 பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஷிரான் பாசிக்கும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், அவரது கைது குறித்து இதுவரை நாட்டிற்கு எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதேவேளை பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் உறுப்பினரான ‘எல்டோ தர்மே’ என்பவரும் டுபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Scroll to Top