Vimarsagan Media

Home » India » விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம்

விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம்

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணிகளுக்கும் அமைச்சரவையில் இடமளித்து பெரும்பான்மை ஆதரவுடன் விஜய் கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளதால், திமுக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகளின் கூடாரங்கள் காலியாக துவங்கியுள்ளன.

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மூவர் நேற்று தங்களின் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்தனர். முன்னதாக தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் இருந்த பலர் த.வெ.க., கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தி.மு.க.,வில் சிறுபான்மை பிரிவில் உள்ள ஜெ.எம்.பஷீர் விரைவில் த.வெ.க., கட்சியில் இணைய உள்ளார். அதற்காக அமைச்சர் என்.ஆனந்தை சந்தித்து பேசியுள்ளார். முதல்வர் விஜயை சந்தித்து விரைவில் கட்சியில் இணைய இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‛தேசிய தலைவர்’ படத்தில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் மூலம் தென்மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார். இதுப்பற்றி பேசியுள்ள பஷீர், ‛அமைச்சர் என்.ஆனந்த் உடன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்” என்றார். இச்சந்திப்பின்போது அமைச்சர் விஜய் பாலாஜி உடனிருந்தார்.

Scroll to Top