சரியும் குழந்தை பிறப்பு விகிதம் இங்கிலாந்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம்(ONS) வெளியிட்ட சமீபத்திய தரவுகளில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குழந்தைகள் பிறக்கும் விகிதமானது இதுவரை இல்லாத அளவு கடும் சரிவை சந்தித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. பெண் தன்னுடைய வாழ்நாளில் பெற்றுக் கொள்ளும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை விகிதம் (அதாவது மொத்த கருவுறுதல் விகிதம்) 2025ம் ஆண்டு 1.39 ஆக சரிந்துள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு 1.41 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெளிநாட்டு குடியேற்றம் இன்றி ஒரு நாட்டின் மக்கள் தொகையானது நிலைத்து இருக்க 2.1 என்ற கருவுறுதல் விகிதம் தேவைப்படும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள தரவுகள் இலக்கை விட மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.




