Vimarsagan Media

Home » Malaysia » மெட்டா நிறுவனம் தனது முதன்மைச் செயலிகளுக்கான கட்டணச் சந்தாத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது

மெட்டா நிறுவனம் தனது முதன்மைச் செயலிகளுக்கான கட்டணச் சந்தாத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது

மெட்டா நிறுவனம் நேற்று தனது முதன்மைச் செயலிகளுக்கான கட்டணச் சந்தாத் திட்டங்களை அறிமுகப்படுத்தி யது. இது, நீண்டகாலமாக விளம்பர வருவாயைச் சார்ந்திருந்த தனது நிலையை பல்வகைப்படுத்துவதற்கான ஒரு பெரிய முயற்சியாகும்.

மெட்டாவின் தயாரிப்புப் பிரிவுத் தலைவர் நவோமி கிளைட், இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு காணொளியில் இந்த நடவடிக்கையை அறிவித்தார். ஃபேஸ்புக் பிளஸ், இன்ஸ்டாகிராம் பிளஸ் மற்றும் வாட்ஸ்அப் பிளஸ் ஆகியவற்றை உலகளவில் அறிமுகப்படுத்துவதாகவும், வணிகங்கள், படைப்பாளர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்புகளு க்காக மேலும் பல திட்டங்கள் உருவாக்கப் பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மெட்டா நிறுவனம் தனது மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவுச் செலவினங் கள் குறித்து முதலீட்டாளர்களின் ஆய்வை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம், இந்த ஆண்டுக்கான மூலதனச் செலவினங்களை — முக்கிய மாக செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்களுக்காக — 125 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 145 பில்லியன் அமெரிக்க டாலர் வரை இருக்கும் என கணித்துள்ளது.

இந்தச் செய்தியைத் தொடர்ந்து மெட்டாவின் பங்கு விலை கிட்டத்தட்ட மூன்று சதவீதம் உயர்ந்தது.

அறிக்கைகளின்படி, இன்ஸ்டாகிராம் பிளஸ் மற்றும் ஃபேஸ்புக் பிளஸ் செயலிகளுக்கு மாதத்திற்கு 3.99 அமெரிக்க டாலரும், வாட்ஸ்அப் பிளஸ் செயலிக்கு மாதத்திற்கு 2.99 அமெரிக்க டாலரும் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் பிளஸ் மற்றும் ஃபேஸ்புக் பிளஸ் செயலிகள், மேம்பட்ட பகுப்பாய்வுகள், ஸ்டோரியை மீண்டும் பார்க்கும் புள்ளிவிவரங்கள், பரந்த பார்வையாளர்களைச் சென்றடைதல் மற்றும் சுயவிவரத்தைத் தனிப்பயனாக் கும் விருப்பங்கள் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களை வழங்கும்.

மெட்டா ஒன் என்ற ஒரே பிராண்டின் கீழ் தங்கள் பல்வேறு சேவைகளை இறுதி யில் ஒருங்கிணைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கிளைட் கூறினார்.

Scroll to Top