Vimarsagan Media

Home » World » கொல்கத்தாவில் பிரபல காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸியின் சிலை காற்றில் ஆடியதால் அகற்றப்பட்டது

கொல்கத்தாவில் பிரபல காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸியின் சிலை காற்றில் ஆடியதால் அகற்றப்பட்டது

இந்தியா, கொல்கத்தா நகரில் பிரபல காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸியின் (Lionel Messi) சிலை அகற்றப்பட்டுள்ளது. அந்த 21 மீட்டர் உயரச் சிலை காற்றில் ஆடியதால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம் சிலையை எங்கு வைப்பது என்று அதிகாரிகள் முடிவெடுக்கும்வரை அது அரசாங்கக் கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும். சென்ற ஆண்டு (2025) டிசம்பர் மாதம் மெஸ்ஸி இந்தியாவிற்கு வருகை அளித்தபோது அந்தத் தங்க நிறச் சிலை திறந்து வைக்கப்பட்டது.1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் கிரிக்கெட் மோகமே அதிகம்.

அனைத்துலகக் காற்பந்தில் கால்பதிப்பதில் அது தொடர்ந்து சிரமங்களை எதிர்நோக்குகிறது. FIFA தரவரிசையில் இந்தியா 142ஆவது இடத்தில் உள்ளது.

Scroll to Top