Vimarsagan Media

Home » Malaysia » ஜூலை 1-ஆம் தேதி புதிய கடப்பிதழ்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 36,928 கடப்பிதழ்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன

ஜூலை 1-ஆம் தேதி புதிய கடப்பிதழ்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 36,928 கடப்பிதழ்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன

இந்தப் புதிய கடப்பிதழ்கள் (passport), 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள் 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் காலத்தைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது; இதில் 5 ஆண்டு காலத்திற்கான கட்டணம் RM200 ஆகவும், 10 ஆண்டு காலத்திற்கான கட்டணம் RM350 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 36,928 கடப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குடிவரவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் தெரிவித்தார்.

“மொத்த எண்ணிக்கையில், 23,491 கடப்பிதழ்கள் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலும், 13,437 கடப்பிதழ்கள் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையிலும் வழங்கப்பட்டுள்ளன.

“தேவை சற்று அதிகரித்திருந்தாலும், இதன் விநியோகப் பணிகள் சுமூகமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று நேற்று தொடர்பு கொள்ளப்பட்ட போது அவர் கூறினார்.

நாடு முழுவதும் உள்ள குடிவரவுத் துறை அலுவலகங்களில் கடப்பிதழ்கள் விண்ணப்பச் செயல்முறைகள் ஒழுங்காக நடைபெற்று வருவதாகவும், விண்ணப்பதாரர்கள் இச்செயல் முறையை முடிக்க 45 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை செலவிடுவதாகவும் சகாரியா குறிப்பிட்டார்.

“இன்னும் ஆறு மாதங்களுக்கும் மேலாகச் செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட பழைய வகை கடப்பிதழ்கள் உடனடியாக மாற்ற வேண்டிய அவசிய மில்லை என்று மலேசியர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

“எந்தெந்தக் குடிநுழைவு அலுவலகங் களில் புதிய வகை கடப்பிதழ்கள் வழங்கப்படத் தொடங்கியுள்ளன என்பதை அறிய, பொதுமக்கள் துறையின் இணையதளத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்,” என்றும் அவர் மேலும் கூறினார்

Scroll to Top