Vimarsagan Media

Home » Malaysia » அன்வார் அரசாகத்துக்கு ஆதரவு தொடரும் அம்னோ அறிவிப்பு

அன்வார் அரசாகத்துக்கு ஆதரவு தொடரும் அம்னோ அறிவிப்பு

ஜொகூர் , நெகிரி செம்பிலான் சட்டமன்றங்களுக்கு விரைவில் பொதுத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அம்னோவும் அன்வாரின் பக்கத்தான் ஹரப்பானும் அந்தத் தேர்தல்களில் போட்டியிடப் போவதாக தனித்தனியாக அறிவித்துள்ளன.

மத்தியில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியோடு இணைந்து தேசிய முன்னணி அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டதைப்போல நெகிரி செம்பிலானிலும் அவை ஒன்றாக இருந்தன.

ஆயினும், 36 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் அம்னோவின் 14 உறுப்பினர்கள் ஏப்ரல் இறுதியில் அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கியதைத் தொடர்ந்து, அது சிறுபான்மை அரசாங்கமாக மாறியது. இந்நிலையில், ஜூன் 5ஆம் தேதி நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கலைக்கப் பட்டது.

அந்த மாநிலத்தைப்போலவே ஜொகூர் பக்கத்தான் ஹரப்பானும் அம்னோவும் எதிரெதிர் களத்தில் உள்ளன.அதேபோல 56 உறுப்பினர்களைக் கொண்ட ஜொகூர் சட்டமன்றத்தில் தேசிய முன்னணிவசம் 40 உறுப்பினர் கள் இருந்தனர்.

அங்கு அம்னோ தனியாகக் களமிறங்க எடுத்திருக்கும் முடிவு சட்டபூர்வமான, முதிர்ச்சியான, அரசியலமைப்புக்கு உட்பட்ட ஜனநாயகச் செயல் என்று அம்னோ தலைமைச் செயலாளர் அஷ்ரஃப் வஜ்தி துசுகி புதன்கிழமை (ஜூன் 10) கூறினார்.

புதன்கிழமை நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில், கட்சிகளின் ஒத்துழைப்பு என்பது நேர்மை, நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலான கொள்கைகளில் வேரூன்றி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

Scroll to Top