Vimarsagan Media

Home » India » குடும்பத்துடன் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்த நடிகை சிம்ரன்

குடும்பத்துடன் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்த நடிகை சிம்ரன்

நடிகை சிம்ரன் நேற்று தனது குடும்பத்தினருடன் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு இதனைத் தொடர்ந்து, சிம்ரன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பல ஆண்டுகளு க்கு முன்பு இணைந்து நடித்த பிறகு, மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களை எனது குடும்பத்தினருடன் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.

அவரைப் பலருக்கும் பிடித்தமானவராக மாற்றிய அன்பு, பணிவு மற்றும் நேர்மை இன்றும் மாறாமல் இருப்பதை காண முடிந்தது. மாநில வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பும் தொலைநோக்குப் பார்வையும் ஊக்கமளிக்கிறது. தமிழகத்தை அவர் சிறப்பாக வழிநடத்திச் செல்ல எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்

Scroll to Top