ஒவ்வொரு ஆண்டும் எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் (Economist Intelligence Unit – EIU) என்ற அமைப்பு, உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களின் வாழ்க்கைச் சூழல், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை ஆய்வு செய்து, “வாழத் தகுதியான சிறந்த நகரங்களின்” பட்டியலை (Global Liveability Index) வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான புதிய உலகளாவிய பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. வெளிநாடு களுக்குக் குடியேறத் திட்டமிடுபவர் களுக்கும், சிறந்த வாழ்க்கைத்தரத்தை எதிர்பார்ப்பவர்களுக்கும் ஏற்ற நாடுகள் குறித்து பார்க்கலாம்.
ஆஸ்திரியாவின் ‘வியன்னா’ மீண்டும் முதலிடம் கடந்த சில ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் ஆஸ்திரியா நாட்டின் தலைநகரமான வியன்னா உலகின் மிகச் சிறந்த, வாழத் தகுதியான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
வியன்னாவின் அசைக்க முடியாத சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு, உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் சுகாதார வசதிகள், மிகக் குறைந்த கட்டணத்திலான பொதுப் போக்குவரத்து மற்றும் அற்புதமான கலாச்சாரச் சூழல் ஆகியவை இந்த நகரத்தை மீண்டும் முதலிடத்தில் அமர வைத்துள்ளன.




