Vimarsagan Media

Home » World » கத்தாரின் முக்கிய எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் வெடிவிபத்து – 54 பேர் காயம்: பலர் மாயமாகியுள்ளதாக தகவல்

கத்தாரின் முக்கிய எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் வெடிவிபத்து – 54 பேர் காயம்: பலர் மாயமாகியுள்ளதாக தகவல்

கத்தாரில் உள்ள முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 54 பேர் காயமடைந்ததாகவும், 18 பேரை காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வளைகுடா நாடான கத்தாரில் உள்ள ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரின் பர்சான் எரிவாயு ஆலையில் நேற்று இரவு ஒரு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 54 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதுடன்18 பேர் மாயமாகியுள்ளதாக கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

|இந்த வெடிவிபத்தின் தாக்கத்தால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அடர்ந்த கரும்புகை சூழ்ந்துள்ளதுடன், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளது.

எனினும், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், அபாயகரமான கசிவு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

மேலும் விபத்தின் போது ஆலைக்குள் இருந்த 18 தொழிலாளர்கள் மாயமாகியுள்ளதுடன், மீட்புக் குழுவினர் ஆலையின் இடிபாடுகளுக்கு இடையே அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Scroll to Top