Vimarsagan Media

Home » Entertainment » நள்ளிரவு 12 மணிக்கு விஜய்யுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய திரிஷா

நள்ளிரவு 12 மணிக்கு விஜய்யுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய திரிஷா

தமிழக முதல்வர் விஜய்க்கு முதல் ஆளாக நடிகை திரிஷா பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். நள்ளிரவு 12 மணிக்கு விஜய்யுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை திரிஷா தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எல்லாவற்றையும் மதிப்புக்குரியதாக மாற்றும் நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

தவெக தலைவரும் முதல்வருமான விஜய் தனது 52 வது பிறந்த நாளை கொண்டாடினார். விஜய் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து

தவெக தொண்டர்களும் சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கினர். விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகூறிய நிலையில், அவரது நெருங்கிய தோழியும் பிரபல நடிகையுமான திரிஷா வாழ்த்து எதுவும் நேற்று கூறவில்லை. இது சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.

Scroll to Top