புத்ராஜயா, ஜூன் 23 — கணினிப் பராமரிப்புப் பணிகளுக்கு வசதியாக, மலேசிய குடிவரவுத் துறை (JIM) நாடு முழுவதும் உள்ள 71 கடப்பிதழ் (அனைத்துலக பாஸ்போர்ட்)வழங்கும் அலுவலகங்களில் உள்ள கடப்பிதழ் சேவை மையங்களை கட்டம் கட்டமாக தற்காலிகமாக மூடவுள்ளது.
சமூக ஊடகப் பதிவு ஒன்றில், பாதிக்கப்பட்ட கிளைகளில் நேரடியாகச் சமர்ப்பிக்கப்படும் கடப்பிதழ் விண்ணப்பங்கள், MyOnline Passport மூலமான விண்ணப்பங்கள் மற்றும் கடவுச்சீட்டு அச்சிடும் சேவைகள் ஆகியவை இந்த மூடல் காலத்தில் கிடைக்காது என்று JIM தெரிவித்துள்ளது.
இந்தத் தற்காலிக மூடல் பல கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் என்றும், முதல் கட்டம் ஜூன் 26 முதல் 30 வரை நடைபெறும் என்றும் அத்துறை கூறியுள்ளது.
முதல் கட்டத்தில் புத்ராஜயாவில் உள்ள குடிவரவுத் தலைமையகம் மற்றும் ஜாலான் டூட்டா, மலாக்கா, கெலானா ஜெயா மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) ஆகிய இடங்களில் உள்ள கடப்பிதழ் வழங்கும் அலுவலகங்கள் அடங்கும் சேவை மையங்களை கட்டம் கட்டமாக தற்காலிகமாக மூடவுள்ளது.




