கோலாலம்பூர், ஜூன் 24,
மலேசிய திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலாய் திரைப்படமான “Keris” வரும் ஜூலை 2, 2026 முதல் நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தின் மூலம் திறமையான இசையமைப்பாளர் பாலன்ராஜ் ( Composer BalanRaj ) தனது முதல் மலாய் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மலேசியத் தமிழ் திரைப்படங்களில் ஏற்கனவே பல படைப்புகள் மூலம் தனது இசைத் திறமையை நிரூபித்துள்ள பாலன்ராஜ், தற்போது மலாய் திரைப்படத் துறையிலும் தனது தடத்தை பதித்துள்ளார்.
படத்தின் பாடல்களை வின்ஸ் ( Vinz Primey ) எழுதி பாடியுள்ளார். அவரது வரிகளும் குரலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. பாடல்களின் உணர்வை அழகாக வெளிப்படுத்தும் வகையில் அவரது பாடல் வரிகளும் குரல் வளமும் அமைந்துள்ளதாக இசை ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.
இதற்கு முன்பு பாலன்ராஜ் இசையமைத்த “Parameswara” பாடல் யூடியூபில் நல்ல வரவேற்பைப் பெற்று, ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, “Keris” திரைப்படத்தின் இசையும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
மலேசிய இசைத்துறையில் தொடர்ந்து வளர்ந்து வரும் பாலன்ராஜ் மற்றும் வின்ஸ் ஆகியோரின் இந்த புதிய முயற்சிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்




