மறைந்த அலி கமேனி இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா -இஸ்ரேல் போரின் போது முன்னாள் உச்சத்தலைவர் அலி கமேனி பிப்.28ல் கொல்லப்பட்டார். அவரின் மறைவுக்கு பின்னரும் போர் நீடித்ததால் இறுதிச்சடங்குகள் நடத்துவதில் சிக்கல்கள் நிலவின. போர் காரணமாக மார்ச் மாதமே நடத்துவதாக இருந்த இறுதிச் சடங்குகளும் பின்னர் ஒத்தி வைக்கப்பட்டன.இந் நிலையில், ஜூலை 4 முதல் ஜூலை 9 வரை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
ஜூலை 4ம் தேதி இறுதிச் சடங்குகள் தொடங்குகின்றன. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு ஈரரன் அதிபர் மசூத் பெசேஷ்கியான் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அலி கமேனியின் உடலுக்கு அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு ஜூலை 4ம் தேதி டெஹ்ரானின் கிராண்ட் மொசல்லா வளாகத்தில் நடைபெறும். அங்கு அவரது உடல் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.
டெஹ்ரானில் பெரிய ஊர்வலம் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது. மேலும், தஜாப், கர்பலா நகரங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கின்றன. அதன் பின்னர், ஈரானின் வடகிழக்கு பகுதியில் கமேனியின் சொந்த ஊரான மஷ்ஹத்தில் இருக்கும் தர்காவில் ஜூலை 9ம் தேதி நல்லடக்க சடங்குகள் நடக்க உள்ளன.




