Vimarsagan Media

Home » Malaysia » உலகின்முதல் 7பல்கலைக்கழகங்களில் , யுஎஸ்எம் ( USM) மற்றும் யுகேஎம் (UKM) மலேசியாவை உலக வரைபடத்தில் !

உலகின்முதல் 7பல்கலைக்கழகங்களில் , யுஎஸ்எம் ( USM) மற்றும் யுகேஎம் (UKM) மலேசியாவை உலக வரைபடத்தில் !

டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் (THE) இம்பாக்ட் ரேங்கிங்ஸ் 2026-ல் உலகின் முதல் ஏழு பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்ததன் மூலம், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (USM) மற்றும் மலேசிய தேசிய பல்கலைக் கழகம் (UKM) ஆகியவை மலேசியாவை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) முன்னெடுத்துச் செல்வதில் அவற்றின் செயல்திறனுக்காக மதிப்பிடப்பட்ட 1,600-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங் களில், USM உலகளவில் ஐந்தாவது இடத்தையும், UKM ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சம்ப்ரி அப்துல் காதிர் கூறினார்.

மேலும், SDG 17: இலக்குகளுக்கான கூட்டாண்மை என்பதில் USM தனது முதல் உலகளாவிய நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்றும், இது அனைத்துலக மூலோபாய ஒத்துழைப் பிற்கு தலைமை தாங்கும் மலேசிய பல்கலைக்கழகங்களின் திறனை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

“இந்தச் சாதனை, மலேசிய பல்கலைக்கழகங்கள் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் மட்டுமல்லாமல், சமூகத்திற்கும் உலகளாவிய நிலைத் தன்மை செயல்திட்டத்திற்கும் அர்த்த முள்ள பங்களிப்புகளை வழங்குவதிலும் சிறந்து விளங்கு கின்றன என்பதை நிரூபிக்கிறது,” என்று அவர் புதன்கிழமை (ஜூன் 24) அன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

இந்தச் சாதனைக்காக பல்கலைக்கழகத் தலைமை, கல்வியாளர்கள், ஆராய்ச்சி யாளர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் சம்ப்ரி வாழ்த்து தெரிவித்தார்.

Scroll to Top