நெகிரி செம்பிலானின் செனவாங் பகுதியில் கடந்த ஆண்டு கவனக்குறை வாக வாகனம் ஓட்டி மூவரின் உயிரிழப்பு. க்குக் காரணமான பதின்ம வயது இளைஞர் ஒருவரை, மலாக்கா வில் உள்ள ஹென்றி கர்னி பள்ளியில் (Henry Gurney School) மூன்று ஆண்டுகள் தங்க வைக்குமாறு சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்கு வரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-ன் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, தற்போது 18 வயதாகும் அந்த இளைஞருக்கு மாஜிஸ்திரேட் நூருல் அசுயின் தல்ஹா (Nurul Azuin Talhah) இந்தத் தீர்ப்பை வழங்கியதாக ‘உத்துசான் மலேசியா’ செய்தி வெளியிட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படும் பட்சத்தில், ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் 20,000 முதல் 50,000 ரிங்கிட் வரையிலான அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அந்த இளைஞரை உடனடியாக அப்பள்ளிக்கு அனுப்புமாறும், அவரது பாதுகாவலரான தாயாரை 4,000 ரிங்கிட் பிணையத் தொகையுடன் மூன்று ஆண்டுகளுக்கு நன்னடத்தை பிணை ஒப்பந்தத்தின் கீழ் வைக்குமாறும் அசுயின் உத்தரவிட்டார்.
மேலும், தண்டனைக் காலம் முடிந்த பிறகு ஓராண்டுக்கு அந்த இளைஞர் நன்ன டத்தை கண்காணிப்பு அதிகாரியின் (probation officer) மேற்பார்வையில் இருக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக அந்த இளைஞருக்கு 2,000 ரிங்கிட் அபராதமும், அதைச் செலுத்தத் தவறினால் ஒரு மாத சிறைத்தண்டனை யும் விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2,000 ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறும் அவரது பெற்றோர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
மார்ச் 6 அன்று ஜலான் பெர்சியாரன் செனவாங் 1-ல் உள்ள தாமான் மத்தாஹாரி சந்திப்பில் ஐடில் ரம்டான் அப்துல்லா (15), அஸ்வாரி லோட்பி (16) மற்றும் ஐசார் அசிம் அப்துல்லா (17) ஆகியோரின் உயிரிழப்புக்குக் காரணமானதாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டபோது, அவர் முதலில் குற்றத்தை மறுத்து விசாரணையை எதிர்கொள்ளவிருப்பதாகக் கூறியிருந்தார்.
நவம்பர் மாதத்தில் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்திடம் அவர் சமர்ப்பித்த மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிசம்பர் 17 அன்று தனது நிலைப்பாட்டை மாற்றி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஊன்றுகோல் உதவியுடன் நீதிமன்றத் திற்கு வந்த அந்த இளைஞரின் உடல் நிலை மோசமாக இருந்ததால், தண்ட னையை ஒத்திவைக்குமாறு அவரது வழக்கறிஞர் ஜோஹன் ராட்ஸி கோரிக்கை விடுத்தார்.
ஆனால், நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரித்ததுடன், அப்பள்ளியிலேயே அவருக்குச் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இருப்ப தாகவும் தெரிவித்தது




